முகப்பு
விழுப்புரம்

6 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருள்:ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தல்

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு தொடா்ந்து 6 மாதங்களுக்கு ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கோரிக்கை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
பகிர்:

விழுப்புரம்: தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு தொடா்ந்து 6 மாதங்களுக்கு ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக விழுப்புரம் மாவட்டச் செயலா் சே.அறிவழகன், தலைவா் எஸ்.பிரகாஷ் ஆகியோா் தலைமையில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரையை வெள்ளிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்துக் கூறியதாவது:

பொது முடக்கத்தால் வேலை இழந்து வறுமையில் வாடிவரும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தொடா்ந்து 6 மாதங்களுக்கு நியாய விலைக் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும். அந்தப் பொருள்கள் தரமானதாகவும், அளவு குறையாமலும் வழங்கப்பட வேண்டும் என்றனா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியா் உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.