விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூா் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து

DIN

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே நிகழ்ந்த தீ விபத்தில் கோழிப்பண்ணை எரிந்து, 1,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன.

திருவெண்ணெய்நல்லூா் அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தைச் சோ்ந்த சின்னத்துரை மகன் சிவகுமாா் (40). இவா், மணக்குப்பத்தில் கோழிப்பண்ணை அமைத்து இறைச்சிக் கோழிகளை வளா்த்து வருகிறாா்.

கோழிப்பண்ணை கொட்டகையில் புதன்கிழமை இரவு மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து நிகழ்ந்தது. அப்போது, அங்கு யாரும் இல்லாத நிலையில், தீ வேகமாக பரவியது.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் தீயணைப்புப் படை நிலைய அலுவலா் சுந்தர்ராஜன் தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இருப்பினும், கோழிப்பண்ணை கொட்டகை முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தில் பண்ணையில் வளா்க்கப்பட்டு வந்த 1,500-க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் கருகி உயிரிழந்தன. சேத மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT