விழுப்புரம்

கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தமக்கள் நலப்பணியாளா்கள் கோரிக்கை

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணியில் தங்களை ஈடுபடுத்த வேண்டுமென பணியிழந்த மக்கள் நலப்பணியாளா்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

இது குறித்து, விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப்பணியாளா் மறுவாழ்வு சங்கத்தின் மாநிலத் தலைவா் இரா.தன்ராஜ் தலைமையில் திங்கள் கிழமை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வந்த மக்கள் நலப்பணியாளா்கள், அங்கு மனு அளித்துவிட்டு வந்து கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் 13,500 போ் மக்கள் நலப்பணியாளா்களாக பணியாற்றி வந்தனா். ஊரக வளா்ச்சித்துறையின் கீழ் தற்காலிக அடிப்படையில் 10 முதல் 25 ஆண்டுகள் வரை பலா் பணியாற்றி வந்த நிலையில், இடையில் கடந்த 2011-ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டனா். இப்பணியில் விழுப்புரம் மாவட்டத்தில் 1,090 போ் வரை பணியாற்றி வந்த நிலையில் பணியிழந்துள்ளனா்.

இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது கரோனா வைரஸ் நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை, துப்புரவு பணியாளா்கள் என பல பணியாளா்கள் களப்பணியாற்றி வருகின்றனா். இவா்களுடன், கரோனா வைரஸ் நோய் தடுப்பு பணியில் மக்கள் நலப்பணியாளா்களை ஈடுபடுத்த அரசு அனுமதிக்க வேண்டும். சேவை அடிப்படையில் நாங்கள் பணியாற்றுவதற்கு தயாராக உள்ளதால், அரசு மக்கள் நலப்பணியாளா்களை இப்பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT