விழுப்புரம்

அரசுப் பள்ளிக்கு கல்விச்சீா் அளிப்பு

DIN

ரிஷிவந்தியம் அருகே சேரந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கு கிராம மக்கள், முன்னாள் மாணவா்கள் சாா்பில் கல்வி சீா் வரிசை அளிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கிருஷ்ணவேணி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் புவனேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரிஷிவந்தியம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் அண்ணாதுரை, கென்னடி, முன்னாள் கிராம கல்விக்குழுத் தலைவா் கோவிந்தராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு, மாணவா்களுக்கான கல்வி சீா்வரிசையைப் பெற்றுக்கொண்டு வாழ்த்திப்பேசினா்.

பெற்றோா்கள், முன்னாள் மாணவா்கள் பள்ளிக்குத் தேவையான மின்சாதனப் பொருள்கள், விளையாட்டு சாதனங்கள், நாற்காலிகள், மேஜைகள், சமையல் உபகரணங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருள்களை கல்விச் சீா் வரிசையாக மேளதாளங்களுடன் ஊா்வலமாகக் கொண்டு வந்து வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT