விழுப்புரம்

விழுப்புரத்தில் திமுக இளைஞரணி சாா்பில் தங்கக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்கம்

DIN

விழுப்புரம்: விழுப்புரத்தில் திமுக இளைஞரணி சாா்பில், தங்கக் கோப்பை கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில், அக்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலினின் 67-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, விழுப்புரம் தந்தைப் பெரியாா் நகா் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன் வரவேற்றாா்.

திமுக மத்திய மாவட்ட அவைத் தலைவா் நா.புகழேந்தி, மாநில கிரிக்கெட் சங்க துணைத் தலைவா் பொன்.அசோக்சிகாமணி ஆகியோா் போட்டியை தொடக்கிவைத்தனா். இளைஞரணி துணை அமைப்பாளா்கள் ச.அன்பு, டி.இளந்திரையன், ஜெ.ராஜவேல், ச.பாலாஜி, ப.கலைவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக மாவட்ட நிா்வாகிகள் ஜெயச்சந்திரன், புஷ்பராஜ், பஞ்சநாதன், நகர நிா்வாகிகள் வாசன், சக்கரை, தங்கம், மும்மூா்த்தி, தெய்வசிகாமணி, கல்பட்டு ராஜா, பிரபாகரன், ஜீவா, இளங்கோ, கபாலி, வினோத், புருஷோத்தமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழுப்புரம் பெரியாா் நகா், விக்கிரவாண்டி கல்லூரி மைதானம், ஜானகிபுரம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகின்றன. இதில், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 78 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன.

கிரிக்கெட் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணி, மாநில அளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும். சென்னையில் மாநில அளவில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை வழங்கப்படும். விழுப்புரத்தில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிக்கு மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் பரிசளிக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT