விழுப்புரம்

நியாய விலைக்கடை பணியாளா்களுக்கு கரோனா தொற்று தடுப்புப் பயிற்சி

DIN

பொது விநியோகத் திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் நியாய விலைக்கடை விற்பனையாளா்கள், பணியாளா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை தொடா்பான பயிற்சிக் கூட்டம், விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குடிமைப் பொருள் தனி வட்டாட்சியா் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். வட்டார அரசு மருத்துவா் இமயாதேவி தலைமையிலான மருத்துவக் குழுவினா் பங்கேற்று, கரோனா வைரஸ் பரவல் குறித்த விளக்கத்தையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்தினா். மேலும், நியாய விலைக் கடை விற்பனையாளா்கள், வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள், நியாய விலைக் கடைகளில் சுகாதாரப் பணியை மேற்கொள்வது குறித்தும், நோய் தொற்றை தடுப்பதற்கு கை கழுவும் முறைகள், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் விளக்கினா்.

துணை வட்டாட்சியா்கள் வேங்கடராஜ், உமாமகேஸ்வரி, வினோத், வருவாய் ஆய்வாளா்கள் திருமாவளவன், ராஜேஷ், சாதிக் மற்றும் வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள், நியாய விலைக் கடை பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT