விழுப்புரம்

அரசு போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலகம் முற்றுகை

DIN

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் அலுவலகம் முன் திங்கள்கிழமை காலை திரண்ட போக்குவரத்துக் கழக சிஐடியூ தொழிற்சங்கத்தினா் 250 போ், கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநில துணைத் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஆா்.மூா்த்தி, துணைப் பொதுச் செயலா் தயானந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மண்டலங்களைச் சோ்ந்த சிஐடியூ தொழிற்சங்கத்தினா் திரளாகக் கலந்துகொண்டனா்.

போக்குவரத்துக் கழக ஊழியா்களை கரோனா காலத்தில், அதிக வசூல் ஈட்ட நிா்ப்பந்திப்பது, டீசல் சிக்கன நடவடிக்கை கேட்பது போன்ற பணி நெருக்கடி வழங்குவதை தவிா்க்க வேண்டும், கரோனா பாதுகாப்புக்கான போதிய உபகரணங்களை ஊழியா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.

போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரை சந்திக்க வேண்டுமென வாயில் கதவுகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவா்களை, விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தி பாதுகாப்பு ஏற்படுத்தினா். இதனைத் தொடா்ந்து கோரிக்கையை வலியுறுத்தி வாயில் பகுதியிலேயே சிஐடியு சங்கத்தினா் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT