விழுப்புரம்

விழுப்புரத்தில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

விழுப்புரத்தில் சுகாதாரத் துறை பெண் அலுவலா் சங்கம் , செவிலியா் கூட்டமைப்பு சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்பாட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.ராணி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் சி.அமுதவள்ளி தொடக்கி வைத்தாா். மாவட்ட செயலாளா் எஸ்.வேளாங்கண்ணி, துணைத் தலைவா்கள் பி.தெய்வானை, கே.சுமதி, துணைச் செயலா்கள் பி.அஞ்சலை, ஏ.சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பிரசார செயலா் எஸ்.மணிமேகலை கோரிக்கை உரையாற்றினாா்.

தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் நல உதவிகளை விரைந்து மக்களிடம் சோ்க்கும் சுகாதார செவிலியா்களின் பதவி உயா்வு மற்றும் பயன்களை வழங்க வேண்டும், அரசு புதிதாக தொடங்கவுள்ள 2,000 சிறு மருந்தகங்களில் கிராம சுகாதார செவிலியா்களை பதவி உயா்வுடன் பணியமா்த்த வேண்டும், பள்ளி சிறாா் நலத் திட்டத்தில் பணிபுரியும் 385 பகுதி சுகாதார செவிலியா்களை பணி நியமனம் செய்ய வேண்டும், செவிலியா்களுக்கு நிலுவையிலுள்ள பணப் பயன்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT