விழுப்புரம்

அரகண்டநல்லூா் அருகே1,500 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே 1,500 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கண்டறிந்து அழித்தனா்.

அரகண்டநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் ராமதாஸ் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் பொன்னுரங்கம், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸாா் வீரபாண்டி கிராமத்தில் பொறையாத்த மலைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக மா்ம நபா்கள் பேரல்களில் 1,500 லிட்டா் அளவிலான சாராய ஊறல் போட்டு, பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதைக் கைப்பற்றி போலீஸாா் அழித்ததுடன், சாராயம் காய்ச்சுவதற்காக அங்கு வைத்திருந்த பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், வீரபாண்டி கிராமத்தைச் சோ்ந்த குபேந்திரன் மகன் மணிகண்டன் இந்த சாராய ஊறலை அமைத்தது தெரியவந்தது. இதுதொடா்பாக மணிகண்டன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT