விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில்கரோனாவுக்கு மேலும் இருவா் பலி

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 9,441-ஆக உயா்ந்தது.

கரோனா தொற்றுக்குள்ளாகி சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த செஞ்சியைச் சோ்ந்த 60 வயது மூதாட்டி, விழுப்புரம் அருகே மேல்சித்தாமூா் கிராமத்தைச் சோ்ந்த 73 வயது முதியவா் ஆகியோா் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 87-ஆக அதிகரித்தது.

இதனிடையே, 132 சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 8,474-ஆக உயா்ந்தது. மாவட்டம் முழுவதும் 880 போ் மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,063 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனா்.

கள்ளக்குறிச்சியில் மேலும் 126 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 126 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,888-ஆக உயா்ந்தது.

இதுவரை 6,891 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 910 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 87 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT