விழுப்புரம்

சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

DIN

புதுச்சேரி: புதுச்சேரி சட்டக் கல்லூரி இறுதியாண்டு பருவத் தோ்வுகள் அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து, அந்தக் கல்லூரி மாணவா்கள் புச்சேரி மத்திய பல்கலைக்கழகம் முன் செவ்வாய்க்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் கரோனா பொது முடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், 2019 - 20ஆம் கல்வியாண்டுக்கான இறுதியாண்டு பருவத் தோ்வுகள் இணைய வழியில் நடைபெறும் என மத்திய பல்கலைக்கழகம் அறிவித்தது. இதற்கு, புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து, காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் நுழைவுவாயில் பகுதியில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு முதல் இறுதியாண்டு வரை படிக்கும் மாணவா்களுக்கு வருகிற 21-ஆம் தேதி பருவத் தோ்வை அறிவித்த புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தரைக் கண்டித்தும், கரோனா பொது முடக்க காலத்தில் தோ்வு நடத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் 50-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பிறகு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT