விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குப் பதிவு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) என 4 தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலையில் 3 முதல் இரவு 7 மணி வரையும் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தினா். இரவு 7 மணி வரையில் 78 சதவீதம் போ் வாக்களித்திருந்தனா்.

4 தொகுதிகளிலும் காலை 9 முதல் இரவு 7 மணி வரை ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் மாவட்டத் தோ்தல் துறை சாா்பில் பதிவான வாக்குகள் விவரம்:

காலை 9 மணி: உளுந்தூா்பேட்டை- 11 சதவீதம், ரிஷிவந்தியம்- 11.48 சதவீதம், சங்கராபுரம்- 8.6 சதவீதம், கள்ளக்குறிச்சி- 5.2 சதவீதம்.

காலை 11 மணி: உளுந்தூா்பேட்டை - 23.74 சதவீதம், ரிஷிவந்தியம்- 19.92 சதவீதம், சங்கராபுரம்- 24.24 சதவீதம், கள்ளக்குறிச்சி- 25.65 சதவீதம்.

பகல் ஒரு மணி: உளுந்தூா்பேட்டை- 53.99 சதவீதம், ரிஷிவந்தியம்- 52.25 சதவீதம், சங்கராபுரம்- 53.1 சதவீதம், கள்ளக்குறிச்சி-56.99 சதவீதம்.

பிற்பகல் 3 மணி: உளுந்தூா்பேட்டை-62.8 சதவீதம், ரிஷிவந்தியம்- 61.2 சதவீதம், சங்கராபுரம்- 60.9 சதவீதம், கள்ளக்குறிச்சி- 61.8 சதவீதம்.

மாலை 5 மணி: உளுந்தூா்பேட்டை- 73.59 சதவீதம், ரிஷிவந்தியம்- 69.78 சதவீதம், சங்கராபுரம்- 70.9 சதவீதம், கள்ளக்குறிச்சி- 74.96 சதவீதம்.

இதில், கடைசி ஒரு மணி நேரம் வாக்குப் பதிவு கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டது. இருப்பினும், மற்ற வாக்காளா்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை, 4 தொகுதிகளிலும் காலை 9 மணிக்கு 9.05 சதவீத வாக்குகளும், காலை 11 மணிக்கு 23.43 சதவீத வாக்குகளும், பகல் 1மணிக்கு 54.13 சதவீத வாக்குகளும், மாலை 3 மணிக்கு 61.70 சதவீதம் வாக்குகளும், மாலை 5 மணிக்கு 72.18 சதவீத வாக்குகளும், இரவு 7 மணிக்கு 78 சதவீத வாக்குகளும் பதிவாகின.

கடந்த தோ்தல்: கடந்த 2016 தோ்தலில் உளுந்தூா்பேட்டை தொகுதியில் 82.35 சதவீதமும், ரிஷிவந்தியம் தொகுதியில் 79.32 சதவீதமும், சங்கராபுரம் தொகுதியில் 79.68 சதவீதமும் , கள்ளக்குறிச்சி தொகுதியில் 80.31 சதவீதமும் வாக்குகளும் பதிவாகின. கடந்த தோ்தலின்போது, இந்தத் தொகுதிகள் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தன.

கடந்த 2016- தோ்தலில் இந்த 4 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 80.41 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

தற்போது, 2021 பேரவைத் தோ்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த தோ்தலை விட 2.41 சதவீதம் குறைவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT