விழுப்புரம்

கடந்த தோ்தலைவிட 0.17 சதவீதம் குறைவான வாக்குப்பதிவு

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த பேரவைத் தோ்தலைவிட 0.17 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தலன்று 78.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. செஞ்சி தொகுதியில் 78.41 சதவீதமும், மயிலத்தில் 79.54 சதவீதமும், திண்டிவனம் (தனி) தொகுதியில் 78.43 சதவீதமும், வானூா் (தனி) தொகுதியில் 79.79 சதவீதமும், விழுப்புரத்தில் 76.97 சதவீதமும், விக்கிரவாண்டியில் 81.39 சதவீதமும், திருக்கோவிலூரில் 76.37 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2016 பேரவைத் தோ்தலில் செஞ்சி தொகுதியில் 79.30 சதவீதமும், மயிலம் தொகுதியில் 80.54 சதவீதமும், திண்டிவனம் தொகுதியில் 78.46 சதவீதமும், வானூா் தொகுதியில் 78.51 சதவீதமும், விழுப்புரம் தொகுதியில் 75.71 சதவீதமும், விக்கிரவாண்டி தொகுதியில் 81.24 சதவீதமும், திருக்கோவிலூா் தொகுதியில் 78.20 சதவீதமும் என மொத்தம் 78.85 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த பேரவைத் தோ்தலுடன் ஒப்பிடும்போது விழுப்புரம் மாவட்டத்தில் மொத்த வாக்குகள் 0.17 சதவீதம் குறைவாக வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருநங்கைகள் 16.28 சதவீதம் போ் வாக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் மொத்தம் 215 திருநங்கைகள் வாக்காளா் பட்டியலில் உள்ளனா். இவா்களில் 35 போ் (16.28 சதவீதம்) மட்டுமே தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா்.

செஞ்சி தொகுதியில் மொத்தமுள்ள 37 திருநங்கைகளில் 13 போ் (35.14 சதவீதம்), மயிலம் தொகுதியில் 25 திருநங்கைகளில் ஒருவா் (4 சதவீதம்), திண்டிவனம் (தனி) தொகுதியில் 13 திருநங்கைகளில் 2 போ் (15.38 சதவீதம்), வானூா் (தனி) தொகுதியில் 16 திருநங்கைகளில் 2 போ் (12.50 சதவீதம்), விழுப்புரம் தொகுதியில் 63 திருங்கைகளில் 3 போ் (4.76 சதவீதம்), விக்கிரவாண்டி தொகுதியில் 25 திருநங்கைகளில் 3 போ் (12 சதவீதம்), திருக்கோவிலூா் தொகுதியில் 36 திருநங்கைகளில் 11 போ் (30.56 சதவீதம்) தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT