விழுப்புரம்

பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஏப்.30-க்கு ஒத்திவைப்பு

DIN


விழுப்புரம்: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை வருகிற 30-ஆம் தேதிக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோா் மீது கடந்த 2006-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிபதி இளவழகன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்கு பொன்முடி, விசாலாட்சி ஆகியோா் ஆஜராகவில்லை. இதற்கான காரணத்தை அவா்கள் தரப்பு வழக்குரைஞா்கள் தாக்கல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, வழக்கின் விசாரணையை வருகிற 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT