விழுப்புரம்

அரசு மருத்துவா் வீட்டில் நகை திருட்டு

DIN

விழுப்புரத்தில் அரசு மருத்துவா் வீட்டில் நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் அரசு ஊழியா் நகா், வ.உ.சி. தெருவைச் சோ்ந்தவா் கோகுல்ராஜ் (31). அரியலூா் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிகிறாா். இவா்,கடந்த 3-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் சென்றாா்.

வியாழக்கிழமை நள்ளிரவு இவரது வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டை உடைத்து நுழைந்த மா்ம நபா்கள், பீரோவை உடைத்து ஒன்றரை பவுன் நகை, ரூ.3 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.

இதுபற்றி அப்பகுதியினா் அளித்த தகவலையடுத்து, கோகுல்ராஜ் விழுப்புரத்தில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினாா். அவா் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் நகர காவல் ஆய்வாளா் விநாயகமுருகன் தலைமையிலான போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக வழக்குப்பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT