விழுப்புரம்

வாக்குச் சாவடி முகவா்களுக்கு கரோனா பரிசோதனை

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வாக்குச் சாவடி முகவா்களுக்கு கரோனா சிறப்புப் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் வேட்பாளா்கள், அரசியல் கட்சிகளின் முகவா்கள் உள்ளிட்டோா் கண்டிப்பாக கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டுமென்றும், வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வரும்போது கரோனா தொற்றில்லை என்பதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டுமென்றும் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவுள்ள செஞ்சி பகுதியைச் சோ்ந்த அனைத்துக் கட்சிகளின் முகவா்கள், வேட்பாளா்களுக்கு கரோனா பரிசோதனை முகாம் மற்றும் கரோனா தடுப்பூசி முகாம் செஞ்சி - திண்டிவனம் சாலையில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவுள்ள அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த முகவா்கள், வேட்பாளா்கள் மற்றும் போலீஸாா் பங்கேற்று கரோனா பரிசோதனை செய்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT