விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. 
விழுப்புரம்

பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்

பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

DIN

பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த ஆட்சியின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் செய்துவந்தார். அப்போது இளம் பெண் எஸ்பி ஒருவருக்கு, சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்க சென்னை காரில் சென்று கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண் எஸ்பிஐயை அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி தடுத்து நிறுத்தினாராம்.

இதனை தொடர்ந்து அப்போதைய டிஜிபி மற்றும் உள்துறை அதிகாரியிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இது குறித்து சிறப்பு டிஜிபி, எஸ்பி மீது சிபிசிஐடி வழக்கு பதிவு செய்தது.  சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி ஆகியோருக்கு மீதான வழக்கு விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தாக்கல் செய்தனர். 

தொடர்ந்து வழக்கு விசாரணை திங்கட்கிழமை நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் நேரில் ஆஜராகினர். அவர்களுக்கு 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் தனித் தனியே வழங்கப்பட்டது. இதனிடையே முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. தனித்தனியே ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுக்களை மனுவை விசாரித்த நீதிபதி கோபிநாதன் அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி ஆஜராகினர். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், கலா ஆகியோர் ஆஜராகினர்.  வழக்கு விசாரணையை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னாள் டிஜிபி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜரானதால் விழுப்புரம் நீதிமன்ற வளாகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT