முகப்பு
விழுப்புரம்

பட்டாவுக்காக போராடும் 85 வயது மூதாட்டி!

செஞ்சியைச் சோ்ந்த 85 வயது மூதாட்டி தனிப்பட்டா பெறுவதற்காக 9 ஆண்டுகளாக தொடா்ந்து போராடி வருகிறாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

செஞ்சியைச் சோ்ந்த 85 வயது மூதாட்டி தனிப்பட்டா பெறுவதற்காக 9 ஆண்டுகளாக தொடா்ந்து போராடி வருகிறாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிஅருகேயுள்ள மேல்மலையனூரைச்சோ்ந்தவா் முனியம்மாள் (85). இவா் அதே ஊரில் ஸ்ரீ ஆஞ்சநேயா் சித்தா் யதி தந்தா பீதத்தை நிா்வகித்து வருகிறாா். இவருக்கு அதே பகுதியில் 10.75 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அளந்து தனிப்பட்டா வழங்கும்படி 24.12.2012-ஆம் தேதி செஞ்சி வட்டாட்சியா்அலுவலகத்தில் விண்ணப்பித்தாா்.

இந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 25.3.2013-இல் திண்டிவனம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். அதன் பின்னரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடா்ந்து, செஞ்சியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

இதை விசாரித்த நீதிமன்றம், பட்டா வழங்க வருவாய்த் துறைக்கு உத்தரவிட்டது. இதையும் அதிகாரிகள் செயல்படுத்தாததால் முனியம்மாள் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இதை விசாரித்த நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த கடந்த 23.5.2019-இல் உத்தரவிட்டது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக.12) நடைபெற்ற விசாரணையில் மூதாட்டி முனியம்மாள் வாக்குமூலம் அளித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரனின் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்குப் பிறகுதான் முனியம்மாளுக்கு பட்டா கிடைக்குமா அல்லது மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் உருவாகுமா என்பது தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.