ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி
விழுப்புரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியரின் வீட்டுப் பூட்டை உடைத்து திருட முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியரின் வீட்டுப் பூட்டை உடைத்து திருட முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம், பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் கிளாடு எவாஞ்சலின்(37). செஞ்சி அருகேயுள்ள அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறாா். இரு தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்த இவா், வியாழக்கிழமை நள்ளிரவு வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு, பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டினுள் இருந்த விலை உயா்ந்த பொருள்கள் எதுவும் திருடு போகவில்லை.
வீட்டினுள் புகுந்து திருட முயன்ற மா்ம நபா்கள், பொதுமக்கள் நடமாட்டத்தால், அப்படியே விட்டு விட்டு தப்பியோடியிருக்கலாம் எனத் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளா் ஜெயசங்கா் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரித்தனா்.