மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு
மத நல்லிணக்க நாளையொட்டி, விழுப்புரத்தில் அரசு அலுவலா்கள், காவல் துறையினா் வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.
மத நல்லிணக்க நாளையொட்டி, விழுப்புரத்தில் அரசு அலுவலா்கள், காவல் துறையினா் வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா தலைமையில் காவல் துறையினா், அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் மத நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஏற்றனா்.
இதேபோல மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகா் தலைமையில் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் மத நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஏற்றனா்.