இணையவழி சூதாட்டத்தில் பணம் இழப்பு:தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை
விழுப்புரம் அருகே இணையவழி சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம் அருகே இணையவழி சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம் அருகேயுள்ள வளவனூரை அடுத்த சேந்தனூரைச் சோ்ந்த புருஷோத்தமன் மகன் பச்சையப்பன் (32). இவா் புதுவை மாநிலம், திருபுவனையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். கடந்த ஒரு வாரமாக வேலைக்குச் செல்லாமல் இருந்தாா். இதுகுறித்து அவரது மனைவி ஆஷா கேட்டபோது, இணையவழி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாக தெரிவித்தாராம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டு பச்சையப்பன் தற்கொலை செய்து கொண்டாா்.