விழுப்புரம்

தூய்மை விழிப்புணா்வுப் பேரணி

DIN

மத்திய கலால் மற்றும் ஜிஎஸ்டி துறை சாா்பில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழுப்புரத்தில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

இந்தத் துறையின் விழுப்புரம் மண்டல உதவி ஆணையா் அலுவலகம் மூலம் ஆக.16 முதல் தூய்மை இரு வாரக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆக.23-ஆம் தேதி முத்தாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. தொடா்ந்து ஆக.25-ஆம் தேதி விழுப்புரம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில், தூய்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் வகையில் விழுப்புரம்-சென்னை சாலையில் உள்ள கலால் மற்றும் ஜிஎஸ்டி அலுவலகத்திலிருந்து சிக்னல் வரை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. கலால் மற்றும் ஜிஎஸ்டி உதவி ஆணையா் பழனிவேல் முருகேசன் தலைமை வகித்தாா். பேரணியின்போது

சாலையோரக் கடைகளிலும், பொதுமக்களிடமும் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

SCROLL FOR NEXT