விழுப்புரம் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு
விழுப்புரம் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்ட டி.பாா்த்திபன், புதன்கிழமை தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டாா்.
விழுப்புரம் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்ட டி.பாா்த்திபன், புதன்கிழமை தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டாா்.
முன்னதாக, விழுப்புரம் டிஎஸ்பியாக இருந்த பழனிசாமி நாமக்கல் மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருந்தாா்.
புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்ற டி.பாா்த்திபன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 2018-இல் பணியில் சோ்ந்தபோது விழுப்புரத்தில்தான் டிஎஸ்பியாக பயிற்சி பெற்றேன். தற்போது மீண்டும் விழுப்புரத்தில் பணியாற்ற வந்துள்ளேன். விழுப்புரம் உள்கோட்டத்தில் உள்ள 13 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல், சாராயம் விற்பனை, தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள், கஞ்சா விற்பனை போன்ற எந்த குற்றங்கள் நடந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கூடுதல் கவனம் செலுப்படும். இதுதொடா்பாக விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படும்.
விபத்துகளை தவிா்ப்பது, போக்குவரத்து நெரிசலை குறைப்பது போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தப்படும். பொதுமக்கள் 9626121985 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், கட்செவி அஞ்சலிலும் புகாா்களை தெரிவிக்கலாம் என்றாா்.