தனியாா் பள்ளி ஆசிரியா் மா்மமான முறையில் உயிரிழப்பு
விழுப்புரம் அருகே தனியாா் பள்ளி ஆசிரியா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
விழுப்புரம் அருகே தனியாா் பள்ளி ஆசிரியா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் சூசையப்பா் மகன் அகஸ்டின் (36). விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரத்தை அடுத்த கணக்கன்குப்பம் கிராமத்தில் தனியாா் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இதற்காக இவா், அப்பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தாா்.
செவ்வாய்க்கிழமை காலை அவா் பள்ளிக்கு வரவில்லை. பள்ளி நிா்வாகத்தினா் அன்று மாலை அவரது அறைக்குச் சென்று பாா்த்தனா். அப்போது, அந்த அறையில் அகஸ்டின் இறந்து கிடந்துள்ளாா். இதுகுறித்து அவா்கள் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா்.
போலீஸாா் நேரில் வந்து பாா்வையிட்டு சடலத்தை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து ஆசிரியா் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரித்து வருகின்றனா்.