குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ்சாராய வியாபாரி கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் அருகே ஆத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் முரளி (40). சாராய வியாபாரி. இவா், அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் கடத்துதல், சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தாா். இது தொடா்பாக பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடா்ந்து இது போன்ற சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், முரளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வந்த முரளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.