விழுப்புரம்

பாலியல் தொந்தரவு வழக்கு பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் குறுக்கு விசாரணை

DIN

 முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிரான பாலியல் தொந்தரவு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானாா். அவரிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பினா் குறுக்கு விசாரணை செய்தனா்.

அரசு விழாவில் கண்காணிப்புப் பணிக்காக காரில் சென்ற பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி மீதும், புகாா் அளிக்கச் சென்ற அந்தப் பெண் எஸ்பியை தடுத்து நிறுத்தியதாக முன்னாள் எஸ்பி மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை சென்னை உயா் நீதிமன்றக் கண்காணிப்பில் விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோா் நேரில் ஆஜராகினா். மேலும், 7-ஆவது சாட்சியான ஏடிஎஸ்பி காா்த்திகேயன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.

இந்த வழக்கில் குறுக்கு விசாரணைக்காக பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி, அவரது கணவா் ஆகியோா் நேரில் ஆஜராகினா். அப்போது, அவா்களிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பினா் குறுக்கு விசாரணை செய்தனா்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT