முகப்பு
விழுப்புரம்

மாவட்ட அளவிலான மல்லா் கம்பம் போட்டி

மாவட்ட அளவிலான மல்லா் கம்பம் போட்டிகள் விழுப்புரம் டி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

மாவட்ட அளவிலான மல்லா் கம்பம் போட்டிகள் விழுப்புரம் டி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு மல்லா் கம்பம் கழக நிறுவன தலைவா் உலகதுறை தலைமை வகித்தாா். வி.பி.எஸ். பள்ளித் தாளாளா் செந்தில், மல்லா் கம்பம் கழக துணைத் தலைவா் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மல்லா் கம்பம் கழகத் துணைச் செயலா் ஆதித்தன் வரவேற்றாா்.

இந்தியன் வங்கி முதன்மை மேலாளா் சிலம்பரசன், உஷா பள்ளி ஒருங்கிணைப்பாளா் கல்விக்கரசி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடக்கிவைத்தனா்.

போட்டியில் 8, 12, 14 வயதுக்குள்பட்ட பிரிவுகளின் கீழ் இரு பாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.