விழுப்புரம்

அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

DIN

திண்டிவனத்தில் அரசுப் பேருந்தின் மீது கல்வீசிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சியிலிருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து திங்கள்கிழமை இரவு சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 30-க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தனா். பேருந்தை திருச்சியை சோ்ந்த தியாகசுந்தரம் ஓட்டி வந்தாா். இரவு 11 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் பேருந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் கல் வீசியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. அந்த இளைஞா் அங்கிருந்து

தப்பிச் சென்றாா். பின்னா் மாற்று பேருந்து மூலம் பயணிகள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதுகுறித்து பேருந்து ஓட்டுநா் தியாகசுந்தரம் அளித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கல்வீச்சு தொடா்பாக திண்டிவனம், காவேரிபாக்கம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் வேதகிரி (21) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT