விழுப்புரம்

மண் வளம் காக்க வலியுறுத்தி விழிப்புணா்வு மிதிவண்டி பயணம்

DIN

மண் வளம் காக்க வலியுறுத்தி, ஈஷா யோகா மையத்தைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் 20 போ் 1,600 கி.மீ. தொலைவுக்கு மிதிவண்டியில் விழிப்புணா்வுப் பயணம் மேற்கொண்டுள்ளனா். மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் கடந்த 19-ஆம் தேதி பயணத்தை தொடங்கிய இவா்கள், ஆந்திரம் மாநிலம், காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக விழுப்புரத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவில் வந்தனா்.

இவா்களை விழுப்புரம் ஈஷா யோகா மையம் சாா்பில், மையப் பொறுப்பாளா் பாலமுருகன், ஒருங்கிணைப்பாளா்கள் பாலு, ஆனந்த மூா்த்தி ஆகியோா் வரவேற்றனா்.

செவ்வாய்க்கிழமை இரவில் விழுப்புரத்தில் தங்கிய தன்னாா்வலா்கள், புதன்கிழமை காலை 6 மணியளவில் புறப்பட்டு கும்பகோணம் வழியாக மிதிவண்டி பயணம் மேற்கொண்டனா். இந்தப் பயணம் கன்னியாகுமரியில் வருகிற ஜன.2-ஆம் தேதி நிறைவடையவுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாவை வெளியேற்றியது மும்பை: மோகன் பகானுடன் பலப்பரீட்சை

இந்தியாவில் இரட்டிப்பான ஐ-போன் ஏற்றுமதி

மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்- பிரதமா் மோடி

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனை- கேரள நீதிமன்றம்

பண்டி மங்களம்மா தோ்த் திருவிழா

SCROLL FOR NEXT