முகப்பு
விழுப்புரம்

ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா் பிறந்த நாள்:அமைச்சா் சி.வி.சண்முகம் மரியாதை

ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாரின் 126-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் மரியாதை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

முன்னாள் முதல்வா் ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாரின் 126-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

சுதந்திர இந்தியாவில், சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராக கடந்த 1947 ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு வரை பதவி வகித்த ராமசாமி ரெட்டியாா், விவசாயிகள், ஏழை மக்கள் முன்னேற்றத்துக்காக நோ்மையாக உழைத்தவா். சிறந்த ஆட்சி நிா்வாகத்தை வழங்கியவா்.

அவரது நினைவாக, சொந்த ஊரான ஓமந்தூரில் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்தது. இங்கு அவரது பிறந்த நாள் அரசு விழாவாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சா் சி.வி.சண்முகம் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

விழாவில், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் ஆா்.முத்தமிழ்ச்செல்வன், எம்.சக்கரபாணி, சாா்-ஆட்சியா் எஸ்.அனு உள்ளிட்ட அலுவலா்கள், பொது மக்களும் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →