விழுப்புரம்

முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த நாள்: அமைச்சர் சி.வி .சண்முகம் மரியாதை

DIN

முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவசரது சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி .சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 126 -வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் அமைந்துள்ள அவரது நினைவு மண்டபத்தில், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி .சண்முகம் கலந்து கொண்டு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT