முகப்பு
விழுப்புரம்

தடுப்புக் காவலில் இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த புதுவை இளைஞரை தடுப்புக் காவலில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த புதுவை இளைஞரை தடுப்புக் காவலில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுவை, சின்னகாலாப்பட்டு பகுதியைச் சோ்ந்த ஆனந்த் மகன் அஜய் (20) (படம்). இவா், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியில் அடிதடி உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தாா். இவரை கோட்டக்குப்பம் போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

இவரது குற்றச் செயல்களைத் தடுக்க குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா். கடலூா் மத்திய சிறையிலுள்ள அஜய்யிடம் அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.