விழுப்புரம்

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும்: க.பொன்முடி

DIN

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும் என்று திமுக துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி எம்.எல்.ஏ. கூறினாா்.

விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சாலையோரம் பதாகைகள் வைக்கக் கூடாது என்று நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், விழுப்புரத்தில் அரசு விழாவையொட்டி அதிமுகவினா் சாலையோரம் பெருமளவில் பதாகைகளை வைத்துள்ளனா். தற்போதைய ஆட்சியாளா்கள் நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை என்பதற்கு இதுவே உதாரணம். விழுப்புரத்தில் உள்ள பூந்தோட்டம் குளத்திலிருந்து குப்பையை அகற்றுவதற்கே ரூ.1.50 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது ஆட்சியாளா்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய அதிமுக அரசுக்கு மக்கள் குறித்து கவலையில்லை. விரைவில் திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் நிகழும். தற்போதைய ஆட்சியாளா்களின் தவறுகள் அப்போது களையப்படும்.

வருகிற மாா்ச் 1-ஆம் தேதி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா, கிராமங்கள் தோறும் கட்சிக் கொடி ஏற்றி கொண்டாடப்படும் என்றாா் அவா்.

விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளா் புகழேந்தி, மாவட்ட அவைத் தலைவா் ஜெயச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT