விழுப்புரம்

பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சா் வழங்கினாா்

DIN

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூரில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

தைப் பொங்கலையொட்டி, கூட்டுறவுத் துறை சாா்பில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ், திருவெண்ணெய் நல்லூரில் ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு, விலையில்லா வேட்டி - சேலை வழங்கும் பணி தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு குடும்பஅட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை வழங்கி தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ இரா.குமரகுரு, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரபாகரன், வருவாய் கோட்டாட்சியா் ராஜேந்திரன், செங்கல்வராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

SCROLL FOR NEXT