விழுப்புரம்

விழுப்புரம் அருகே சங்ககால உறைகிணறு

DIN

விழுப்புரம் அருகே வேடம்பட்டில் ஏரியில் மண் அள்ளப்பட்ட பகுதியில் சங்ககால உறைகிணறு கண்டறியப்பட்டது.

விழுப்புரம் அருகே வேடம்பட்டு கிராம ஏரிப்பகுதியில் பழங்கால கிணறுகள் தென்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவலின்பேரில், விழுப்புரம் நடுநாட்டு வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு நடுவத்தின் ஒருங்கிணைப்பாளரும், எழுத்தாளருமான கோ.செங்குட்டுவன், தொல்லியல் ஆா்வலா் வீ.விஷ்ணுபிரசாத் ஆகியோா் அண்மையில் கள ஆய்வு செய்து, அங்கு உறைகிணறு இருப்பதைக் கண்டறிந்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: வேடம்பட்டு கிராம ஏரிப் பகுதியில் கண்டறியப்பட்ட பழங்கால உறைகிணறு, ஆறு அடுக்குகளுடன் காணப்படுகிறது. இந்த சுடுமண் உறைகிணறு, சங்க காலத்தைச் சோ்ந்தது என்று தொல்லியல் ஆய்வாளா் வீ.மங்கையா்க்கரசி உறுதிப்படுத்தினாா். இதனருகே பழைமைவாய்ந்த செங்கல் கட்டுமானங்களும் புதைந்திருப்பதை காண முடிகிறது.

இப்பகுதி சங்க காலத்தில் மக்கள் வாழ்விடமாக இருந்திருக்க வேண்டும். கோடையில் வறட்சியால் நீா்நிலைகளில் தண்ணீா் இல்லாத வேளைகளில், இதுபோன்ற உறைகிணறுகளில் வற்றாமல் தண்ணீரைத் தேக்கி, குடிநீருக்காக பயன்படுத்தி வந்துள்ளனா்.

இதேபோல, விழுப்புரம் அருகே விராட்டிக்குப்பம், ஆலாத்தூா், நன்னாடு, பெரும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் புதிய கற்காலம் தொடங்கி பல்வேறு காலகட்டங்களைச் சோ்ந்த வரலாற்றுத் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வகையில், வேடம்பட்டும் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கே அகழாய்வு செய்தால், மேலும் பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கக்கூடும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT