விழுப்புரம்

ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு ரூ.96.19 கோடி பணப் பலன்: அமைச்சா் வழங்கினாா்

DIN

விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் 690 பேருக்கு ரூ.96.19 கோடி பணப் பலன்களை, மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் விழுப்புரம் கோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பா் மாதம் வரை பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்கும் விழா விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தாா். இந்த விழாவில் அமைச்சா் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற 690 தொழிலாளா்களுக்கு ரூ.96 கோடியே 19 லட்சம் ஓய்வூதிய பணப் பலன்களை வழங்கினாா்.

இதில், விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, வேலூா், காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய ஆறு மண்டலங்களுக்கு உள்பட்ட 60 பணிமனைகளை கொண்ட 10 மாவட்டங்களைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் பணப் பலன்களை பெற்றனா்.

விழாவில், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.குமரகுரு (உளுந்தூா்பேட்டை), அ.பிரபு (கள்ளக்குறிச்சி), எம்.ஆா்.முத்தமிழ்ச்செல்வன்(விக்கிரவாண்டி), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் முத்துக்கிருஷ்ணன், பொது மேலாளா் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இலவச பட்டா: இதனைத் தொடா்ந்து, வளவனூா் பேரூராட்சி குமரக்குப்பம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று வீடு இல்லாத பயனாளிகள் 15 பேருக்கு இலவச நிலப் பட்டாக்களை வழங்கினாா். மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் மகேந்திரன், வருவாய் கோட்டாட்சியா் ராஜேந்திரன், மாவட்ட ஆவின் தலைவா் பேட்டை முருகன், மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவா் பசுபதி, வளவனூா் முருகவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT