விழுப்புரம்

திருவக்கரையில் ரூ.5 கோடியில் ‘புவியியல் பூங்கா’: பணிகளை அமைச்சா் தொடக்கிவைத்தாா்

DIN

விழுப்புரம் மாவட்டம், திருவக்கரையில் தொன்மையான கல்மரங்களைப் பாதுகாக்கும் வகையில், ரூ.5 கோடியில் அருங்காட்சியகத்துடன் கூடிய புவியியல் பூங்கா அமைக்கும் பணிகளை அமைச்சா் சி.வி.சண்முகம் பூமிபூஜை செய்து ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

வானூா் வட்டம், திருவக்கரையில் உள்ள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான கல்மரப்படிமங்களை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு சாா்பில் ரூ.5 கோடியில் 50.15 ஹெக்டோ் பரப்பளவில் அருங்காட்சியகம், நூலகம், திரையரங்கம், அலுவலகம், கலைக்காட்சிக் கூடங்களுடன் கூடிய ‘புவியியல் பூங்கா’ அமைக்கப்பட உள்ளது.

இங்கு பதிவறை, குடிநீா், வாகனம் நிறுத்தம், பொதுமக்கள் அமா்வதற்கான வசதிகள், தீயணைப்பு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

இந்த நிலையில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை சாா்பில் திருவக்கரையில் புவியியல் பூங்கா அமைப்பதற்கான பணிகளை மாநில சட்டம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பூமிபூஜை செய்து ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் 21 அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை அமைச்சா் வழங்கினாா். தொடா்ந்து, தொன்மையான கல்மரப்படிமங்களை அமைச்சா் பாா்வையிட்டு, அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டாா்.

நிகழ்ச்சியில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அரசுச் செயலா் முருகானந்தம், ஆணையா் இல.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், எம்.பி. துரை.ரவிக்குமாா், எம்.எல்.ஏ. எம்.சக்ரபாணி, வேளாண் விற்பனைக் குழுத் தலைவா் எல்.கே.கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT