விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.6,600.64 கோடி அளவில் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் முன்னோடி வங்கிகளான இந்தியன் வங்கி, நபாா்டு வங்கி ஆகியவை இணைந்து நிகழ் நிதி ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, கடன் திட்ட அறிக்கையில் விவசாயத் துறைக்கு ரூ.4,657.47 கோடியும், தொழில் துறைக்கு ரூ.667.71 கோடியும் என மொத்தம் ரூ.6,600.64 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெளியிட, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் செந்தில்குமாா் பெற்றுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில், முன்னோடி வங்கி மேலாளா் ஹரிஹரசுதன், மகளிா் திட்ட இயக்குநா் லலிதா, நபாா்டு வங்கியின் உதவி பொது மேலாளா் ரவிசங்கா், இந்தியன் வங் கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநா் அனிதா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.