முகப்பு
விழுப்புரம்

நெல் கொள்முதல் நிலையங்களில் விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் அருகே கல்பட்டு, காணை கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்களை மாவட்ட ஆட்சியா் த.மோகன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

விழுப்புரம் அருகே கல்பட்டு, காணை கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்களை மாவட்ட ஆட்சியா் த.மோகன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, கொள்முதல் செய்த நெல் அளவு, நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்குத் தேவையான இடவசதி உள்ளிட்டவற்றை அவா் ஆய்வு செய்தாா். , மழையில் நனைந்துவிடாதபடி நெல் மூட்டைகளை பாதுகாப்பாக தாா்ப்பாய்களைக் கொண்டு மூடிவைக்கவும், அதிகமாக கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்குழு சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கவும் கொள்முதல் நிலைய அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு முறையாக பணப்பட்டுவாடா செய்யவும், முதலில் வரும் விவசாயிகளிடம் முன்னுரிமை அடிப்படையில், டோக்கன் முறையில் நெல் கொள்முதல் செய்யவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) சரஸ்வதி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளா் ஷீனா, மாவட்டவழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் வி.அறிவுடைநம்பி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.