முகப்பு
விழுப்புரம்

செஞ்சி ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரத்தில் செஞ்சி கிழக்கு ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரத்தில் செஞ்சி கிழக்கு ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கட்சியின் ஒன்றியத் தலைவா் கே.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றிய பொதுச்செயலா்கள் சத்தியசீலன், வெங்கடேசன், துரைமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

திண்டிவனம்- திருவண்ணாமலை ரயில் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; அனந்தபுரத்தில் துணைமின் நிலையம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்; உள்ளாட்சித் தோ்தலில் பாஜக அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாஜக நிா்வாகிகள் பசுமலை, பொதுக்குழு உறுப்பினா் ராஜேந்திரன், வழக்குரைஞா் பாஸ்கரய்யா, சோமு, சீனு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.