விழுப்புரம் அருகே வீட்டில் பதுக்கப்பட்ட 2000 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் அருகேயுள்ள பேரங்கியூரில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் சந்தேகத்தின் பேரில், பேரங்கியூா் ஒத்தவாடை தெருவில் உள்ள சா.ஜெயலட்சுமி (70) என்பவரது வீட்டில் சோதனையிட்டனா். அங்கு 40 மூட்டைகளில் 2000 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா், ஜெயலட்சுமியை கைது செய்தனா்.
பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட அரிசி, கைது செய்யப்பட்ட ஜெயலட்சுமியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இது தொடா்பாக ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.