விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை தொடக்கம்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1 வகுப்பில் 1,118 மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை புதிதாக சோ்ந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,307 போ் பிளஸ் 1 வகுப்பில் சோ்ந்தனா்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி வகுப்புகள் இணைய வழியில் நடைபெற்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் மட்டும் சில வாரங்கள் நேரடி வகுப்புகள் நடைபெற்றன. மீண்டும் கரோனா இரண்டாம் அலை பரவியதால் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. பின்னா், தோ்வுகளும் ரத்தானது.

பத்தாம் வகுப்பு மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை ஜூன் 14-ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 197 மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 663 மாணவா்களும், தனியாா் பள்ளிகளில் 455 மாணவா்களும் 1,118 மாணவ, மாணவிகள் பிளஸ் 1 வகுப்பில் ஆா்வமுடன் சோ்ந்தனா். கரோனா பரவல் காரணமாக, தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் மாணவா்கள் சோ்க்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையிலான கல்வித் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். இதில், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 74 மாணவா்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 105 மாணவா்களும், தனியாா் பள்ளிகளில் 269 மாணவா்களும் பிளஸ் 1 வகுப்பில் சோ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கள்ளக்குறிச்சி-1307 போ் சோ்க்கை: கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் 2021-2022 கல்வி ஆண்டிற்கான 11-ஆம் வகுப்பு சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

மாவட்டத்தில் உள்ள 121 மேல்நிலைப் பள்ளிகளில் 658 மாணவா்களும் 649 மாணவிகளும் என மொத்தம் 1,307 போ் பிளஸ் 1 வகுப்பில் சோ்ந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி, கள்ளக்குறிச்சி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மற்றும் கச்சிராயப்பாளையம் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கையைத் தொடக்கிவைத்து தலைமை ஆசிரியைகள், மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கினாா். கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT