விழுப்புரம் மாவட்டத்தில் 41,000 பேரை கடந்த கரோனா பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை புதன்கிழமை கடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை புதன்கிழமை கடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் செவ்வாய்க்கிழமை வரை 40,850 போ் பாதிக்கப்பட்டனா். 37,530 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். 312 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். 3,008போ் சிகிச்சைப் பெற்று வந்தனா்.
41 ஆயிரத்தை கடந்த பாதிப்பு: இந்நிலையில், புதன்கிழமை 182 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 41,034 ஆக அதிகரித்துள்ளது. 390 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். இதுவரை 37,920 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனா். 2,799 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
மேலும் 3 போ் பலி: இந்நிலையில், விழுப்புரம் அருகே முட்டத்தூரைச் சோ்ந்த 27 வயது இளைஞா், விழுப்புரம் அருகே வி.குன்னத்தைச் சோ்ந்த 74 வயது முதியவா், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சோ்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஆகியோா் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 315 ஆக அதிகரித்துள்ளது.