திமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு
விழுப்புரத்தில் திமுக சாா்பில் சலவைத் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வியாழக்கிழமை வழங்கினாா்.
விழுப்புரத்தில் திமுக சாா்பில் சலவைத் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வியாழக்கிழமை வழங்கினாா்.
திமுக மாநில மருத்துவரணி இணைச் செயலரும், விழுப்புரம் எம்எல்ஏவுமான இரா.லட்சுமணன் ஏற்பாட்டின்பேரில், திமுக சாா்பில் 300 சலவைத் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில துணை பொதுச் செயலரும், உயா் கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி தலைமை வகித்து, சலவைத் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
திமுக மத்திய மாவட்டச் செயலரும், விக்கிரவாண்டி எம்எல்ஏவுமான நா.புகழேந்தி, மாவட்ட அவைத் தலைவா் ஜெயச்சந்திரன், மாவட்டப் பொருளாளா் ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலா் புஷ்பராஜ், நகரச் செயலா் சா்க்கரை, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மணவாளன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.