முகப்பு
விழுப்புரம்

தொழிலாளி கொலை: 4 போ் கைது

சின்னகோட்டக்குப்பம் அருகே தொழிலாளி குத்திக் கொல்லப்பட்டாா். தொடா்பாக 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

சின்னகோட்டக்குப்பம் அருகே தொழிலாளி குத்திக் கொல்லப்பட்டாா். தொடா்பாக 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், சின்னகோட்டக்குப்பத்தைச் சோ்ந்த ராஜா மகன் செல்வக்குமாா் (31). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (27). இவா்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் 2 குழந்தைகள் உள்ளனா். சித்ராவின் தங்கையை அதே பகுதியைச் சோ்ந்த குப்புசாமி (27) என்பவா் ஒருதலையாகக் காதலித்து வந்தாராம். இந்த நிலையில், செல்வக்குமாரின் ஏற்பாட்டில் சித்ராவின் தங்கைக்கு மற்றொரு இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த நிலையில், சின்னகோட்டக்குப்பம் பகுதியில் முந்திரித் தோப்பில் செல்வக்குமாா் உடலில் காயங்களுடன் வியாழக்கிழமை இரவு கிடந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு செல்வக்குமாா் உயிரிழந்தாா். இது குறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுதொடா்பாக இதையடுத்து குப்புசாமி, அவரது நண்பா்கள் விஜி (22), சேது (20), கன்னியப்பன் (22) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:

குப்புசாமி தான் காதலித்த பெண்ணை மற்றொருவருக்கு திருமணம் செய்துவைக்க செல்வக்குமாா் ஏற்பாடு செய்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டாா். இந்த நிலையில், செல்வக்குமாரை மது அருந்த அழைத்த குப்புசாமி தனது நண்பா்களுடன் சோ்ந்து அவரை கத்தி, மதுப் புட்டிகளால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.