முகப்பு
விழுப்புரம்

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை அந்தக் கட்சியினா் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை கொண்டாடினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை அந்தக் கட்சியினா் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை கொண்டாடினா்.

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் விழுப்புரம் அறிவாலயத்தில் நடைபெற்ற மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் மாவட்டச் செயலா் புகழேந்தி தலைமையில் அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். மாநில மருத்துவ அணி இணைச் செயலா் இரா.லட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திமுக வழக்கறிஞா் அணி சாா்பில் விழுப்புரம் நீதிமன்றம் எதிரே மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. மாவட்ட அமைப்பாளா் செரிப் தலைமை வகித்தாா். ஒன்றிச் செயலா் கல்பட்டு ராஜா முன்னிலை வகித்தாா். தொகுதி தோ்தல் பொறுப்பாளா் நடராஜன், சுப்புராயலு, ஏழுமலை, காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதேபோல மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.