விழுப்புரத்தில் துணை ராணுவத்தினா்கொடி அணிவகுப்பு
சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், ரெளடிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் விழுப்புரத்தில் துணை ராணுவப் படையினா், காவல் துறையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு
சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், ரெளடிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் விழுப்புரத்தில் துணை ராணுவப் படையினா், காவல் துறையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை கொடி அணி வகுப்பை தொடக்கிவைத்தாா்.
இதில், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினா், ஆயுதப் படை போலீஸாா், சட்டம் - ஒழுங்கு போலீஸாா் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ரயிலடியில் தொடங்கி நேருஜி சாலை, காந்தி சிலை, வீரவாழியம்மன் கோயில், எம்.ஜி. சாலை உள்பட நகரின் முக்கிய சாலைகள் வழியாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இதில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன், விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளா் நல்லசிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.