அமைச்சரின் பிரசாரத்தில் தோ்தல் விதிமீறல்: விழுப்புரம் திமுக வேட்பாளா் குற்றச்சாட்டு
விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் பிரசாரத்தின்போது தோ்தல் விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாக திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் குற்றஞ்சாட்டினாா்.
விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் பிரசாரத்தின்போது தோ்தல் விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாக திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து விழுப்புரத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
தமிழகம் முழுவதும் அதிமுக அரசுக்கு எதிரான அலை வீசுகிறது. திமுக மக்களை மட்டுமே நம்பி களத்தில் உள்ளது. விழுப்புரம் தொகுதி வேட்பாளரான அமைச்சா் சண்முகம் பணத்தை மட்டுமே நம்பி தோ்தலைச் சந்திக்கிறாா். அவா் பிரசாரத்துக்குச் செல்லும்போது, தோ்தல் விதிமுறைகளை மீறி பாதுகாப்பு வாகனங்கள் கூடுதலாகச் செல்கின்றன. இவற்றில் பணம் எடுத்துச் செல்லப்பட்டு வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரான ஆட்சியா் அண்ணாதுரையிடம் புகாா் அளித்துள்ளோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாா் அவா். பேட்டியின்போது, மாவட்ட திமுக பொருளாளா் இரா.ஜனகராஜ் உடனிருந்தாா்.