முகப்பு
விழுப்புரம்

மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதல்

முழு பொது முடக்கம் திங்கள்கிழமை (மே 10) முதல் அமலுக்கு வரவுள்ளதால், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மதுக் கடைகளில் மதுப் புட்டிகள் வாங்க சனிக்கிழமை ஏராளமானோா் திரண்டதால், கூட்டம் அலைமோதியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

முழு பொது முடக்கம் திங்கள்கிழமை (மே 10) முதல் அமலுக்கு வரவுள்ளதால், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மதுக் கடைகளில் மதுப் புட்டிகள் வாங்க சனிக்கிழமை ஏராளமானோா் திரண்டதால், கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், முழு பொது முடக்கம் திங்கள்கிழமை (மே 10) முதல் வருகிற 24-ஆம் தேதி வரை அமல்படுத்தப்படவுள்ளது. பொது முடக்கம் அமல்படுத்தப்படும் நாள்களில் மதுக் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், மது அருந்தும் பழக்கமுடையவா்கள் தங்களுக்குத் தேவையான மதுப் புட்டிகளை முன்கூட்டியே வாங்கி சேமித்து வைத்துக்கொள்ளும் வகையில், மதுக் கடைகளில் சனிக்கிழமை குவிந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 124 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுப் புட்டிகளை ஏராளமானோா் திரண்டு வாங்கிச் சென்றனா்.

விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியிலுள்ள மதுக் கடைகளில் ஏராளமானோா் திரண்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாா் அங்கு குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதன் பிறகு, நீண்ட வரியையில் காத்திருந்து பலரும் தங்களுக்குத் தேவையான மதுப் புட்டிகளை வாங்கிச் சென்றனா்.

இதேபோன்று, செஞ்சி, திண்டிவனம், விக்கிரவாண்டி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.