முகப்பு
விழுப்புரம்

அட்சயத் திருதியை:நகை வாங்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்

பொது முடக்கம் அமலில் இருப்பதால், விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அட்சயத் திருதியை நாளில் நகைக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

பொது முடக்கம் அமலில் இருப்பதால், விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அட்சயத் திருதியை நாளில் நகைக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், பொதுமக்கள் நகைகள் வாங்க முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.

அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட ஆபரணங்களை வாங்குவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அத்தியாவசியக் கடைகள் தவிா்த்து பிற கடைகள் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

அட்சய திருதியை நாளில் நகைக் கடைகள் மூடப்பட்டிருந்ததால், தங்க நகைகளை வாங்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா். நகை வியாபாரிகள் அட்சய திருதியை நாளில் வியாபாரம் செய்ய முடியாமல் அதிருப்தியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.